உணவில் உப்பு மிகுந்தாலும் குறைந்தாலும் உண்ணமுடியாது அதே போல வாழ்க்கை பயணத்தில் செலவு மிகுந்தாலும் குறைந்தாலும் நம்மால் கட்டுபடுத்த முடியாமல் போகும். வாழ்க்கை ஒரு சதுரங்கம் இப்படி தான் விளையாடவேண்டும் என்று யாரும் சொல்லுவது கிடையாது மாறாக இப்படி தான் உங்களால் விளையாட முடியும் என்ற தடைகள் இருக்கின்றது.
பணத்தின் பயணத்தை கட்டுபடுத்துவது சிக்கனம் பணத்தையே கட்டுபடுத்துவது கஞ்சத்தனம். அது என்ன செலவு மிகுதி, உங்கள் செலவு எப்படி இருக்கவேண்டும், வரவை விட குறைவாக இருக்க வேண்டும். அதற்க்கு திட்டம் இடுவதே ஒரே வழி, திட்டம் எல்லாம் தீட்டி எங்களால் செலவு செய்ய முடிய வில்லை.
மாதத்தின் முதல் நாள், "இந்த மாசமாவது நம்ம எப்படி யாவது சேமிக்கணும்". இப்படி தான் எல்லா மாதமும் தொடங்கும் ஆனால் சேமிப்பு என்பது ஒரு கனவாகவே சென்று விடுவது நடந்தேறும் உண்மை.
எப்படி சேமிப்பது, இதற்க்கு உதாரணம் நமது இந்திய அரசு. புயல் சுனாமி வறட்சி பஞ்சம் வெள்ளம் இப்படி எத்தனை பேரழிவுகள் இதை எல்லாம் அப்படி சமாளிக்கிறது நமது அரசு. இதை போன்ற இயற்க்கை பேரழிவின் பொது சமாளிக்க உணவை சேமித்து வைக்கிறது.
மாதத்தின் முதலிலேயே ஒரு சிறு தொகையை சேமிப்புக்காக எடுத்து வைத்தால் தான் வீண் விரயத்தை குறைக்க முடியும். இங்கே நான் சொல்வது பண சிக்கனம் மட்டு அல்ல பொருள் சிக்கனம், மின் சிக்கனம்,நீர் சிக்கனம், உணவு சிக்கனம் (தேவையான அளவு சமைத்தல்) என்று பல உள்ளது. சொல் சிக்கனம் சிலசமயம் நம்மை பல நிலைகளில் இருந்து காப்பாற்றும்.
நம் அன்றாட வாழ்வில் பல இடங்களில் சேமிப்பை கண்டு அல்லது வாழ்ந்து இருக்கின்றோம். சேமிப்பு என்பது உண்டியலில் சிறுக சேமிப்பது முதல் அஞ்சல் நிலைய சிறு சேமிப்பு வங்கி நிலை சேமிப்பு பொன் சேமிப்பு அணைகள் நீர்தேக்கங்கள் உணவு கிடங்கு நுகர்வோரை வடிக்கையளர் ஆக்குவது என்று வன்தகட்டில் கோப்புகளை பாதுகாத்து சேமித்து வைப்பது வரை சேமிப்பின் நீளம் அல்லது தேவை இவ்வாறாக வாழ்வின் எல்லா பகுதிகளிலும் இருந்து கொண்டு தான் இருக்கின்றது.
அது சிரி இப்போது சேமிப்பை பற்றி எதுக்கு சொன்னேங்க? சிக்கனம் தானே தலைப்பு. சிக்கனமாய் இருப்பது சேமிப்பதற்கு சேமிப்பு பாதுகாப்பிற்கு பாதுகாப்பு வாழ்க்கையின் ஒரு மூல நோக்காக இருக்கின்றது.
சிக்கனமாய் இருப்பது எப்படி, சிக்கனத்தின் நோக்கம் பற்றி சொன்னது சரி சேமிப்பது எப்படின்னு சொல்லவே இல்லையே. இந்த இரண்டு கேள்விக்கும் ஒரே பதில் தான். இந்த பதிவு நீண்டு கொண்டே போகின்றது இதற்க்கு நான் சொற்களை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். சிக்கனமாக நான் சொற்களை பயன்படுத்தினால் அதிக பேர் படிப்பார்கள் அதிக வாசகர்களை நான் சேமிக்க முடியும்.
சிக்கனம் தொடரும் ...